\
BWF உலக டூர் பைனல் : மூன்றாவது லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவினார் பி.வி.சிந்து!

BWF உலக டூர் பைனல் : மூன்றாவது லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவினார் பி.வி.சிந்து!

BWF உலக டூர் பைனல் : மூன்றாவது லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவினார் பி.வி.சிந்து!
Published on: 

இந்தோனேஷிய நாட்டில் நடைபெற்று வரும் 2021 BWF உலக டூர் பைனல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளார் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. மகளிர் ஒற்றையர் பிரிவில் ‘குரூப் ஏ’-வில் இடம் பெற்றிருந்த அவர், தாய்லாந்து வீராங்கனை Chochuwong-க்கு எதிர்த்து விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் 1 - 2 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளார் சிந்து. முன்னதாக இதே குரூப் பிரிவு ஆட்டத்தில் டென்மார்க் மற்றும் ஜெர்மனி வீராங்கனைகளை 2 - 0 என்ற நேர் செட் கணக்கில் வீழத்தியிருந்தார் சிந்து. அதன் மூலம் அரையிறுதில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாட உள்ளார் சிந்து. 

கடந்த ஜூலையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அகானே யமகுச்சியை நேர் செட் கணக்கில் வீழ்த்தி இருந்தார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com