BWF உலக டூர் ஃபைனல் : மகளிர் ஒற்றையர் பிரிவில் தோல்வியை தழுவினார் பி.வி.சிந்து

BWF உலக டூர் ஃபைனல் : மகளிர் ஒற்றையர் பிரிவில் தோல்வியை தழுவினார் பி.வி.சிந்து
BWF உலக டூர் ஃபைனல் : மகளிர் ஒற்றையர் பிரிவில் தோல்வியை தழுவினார் பி.வி.சிந்து

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்தோனேஷிய நாட்டில் நடைபெற்ற 2021 BWF உலக டூர் பைனல் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளார். சிந்துவை நேர் செட் கணக்கில் வீழ்த்தி தென் கொரிய வீராங்கனை An Se-young. 

இந்தோனேஷிய மாஸ்டர் மற்றும் இந்தோனேஷிய ஓபன் தொடர்களில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற அவர் BWF தொடரிலும் அதையே செய்துள்ளார். 16 - 21, 12 - 21 என சிந்து இந்த போட்டியில் தோல்வியை தழுவியுள்ளார். 

ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை 21-15, 15-21, 21-19 என அரையிறுதியில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்திருந்தார் சிந்து. 

சர்வதேச பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள சிந்து, ஐந்தாவது இடத்தில் உள்ள An Se-young-இடம் பெற்றுள்ளத் இந்த தோல்வி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் சிந்து விளையாடிய மூன்றாவது இறுதிப் போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com