டி20 உலகக் கோப்பை தொடர்: இந்திய அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்

டி20 உலகக் கோப்பை தொடர்: இந்திய அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்
டி20 உலகக் கோப்பை தொடர்: இந்திய அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்

அடுத்தமாதம் டி20 உலகக் கோப்பை துவங்க உள்ளதை முன்னிட்டு இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.

8-வது டி20 உலகக் கோப்பை போட்டி வருகிற அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன. முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் குரூப் ஏ பிரிவில் பிரிக்கப்பட்டு மோதுகின்றன. குரூப் பி பிரிவில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாம்பே ஆகிய நாடுகள் மோதுகின்றன.

இந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23-ம் தேதி பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் மெல்போர்ன் மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. One Blue Jersey என்ற பெயரில் இந்த ஜெர்சி விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில வருடங்களாக கருநீல நிறத்தில் இருந்த அணியின் ஜெர்ஸி மீண்டும் வெளிர்நீல நிறத்துக்கு மாறியுள்ளது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படத்தில், கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஹர்மன்ப்ரீத் கவுர், ஷெஃபாலி வர்மா, ரேணுகா சிங் ஆகியோர் புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்யும் வகையில் இருக்கின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com