சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா (BREDA ) நகரில் நடந்து வருகிறது. 6 நாடுகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இது கடைசி லீக் போட்டி. இந்த போட்டியை டிரா செய்தாலே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெரும். நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது. இந்தப்போட்டி ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. 

இந்திய அணிக்காக 47 ஆவது நிமிடத்தில் மன்தீப் சிங்கும், நெதர்லாந்து அணிக்காக 55 ஆவது நிமிடத்தில் பிரிங்க்மேனும் கோல் அடித்தனர். இந்தப்போட்டியின் முடிவையடுத்து 8‌ புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதியாட்டத்தில் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com