“தயை கூர்ந்து உதவவும் இந்தியா” - பான் கார்டை தவறவிட்ட பீட்டர்சன் ட்வீட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தயை கூர்ந்து தனக்கு இந்தியாவை உதவுமாறு ட்வீட் செய்திருந்தார். அவரது பான் கார்டை அவர் தவற விட்டது தான் காரணம் என தெரியவந்துள்ளது. அவரது ட்வீட்டுக்கு இந்திய வருமான வரித்துறை ரிப்ளை செய்துள்ளது.
“தயை கூர்ந்து உதவவும் இந்தியா! நான் எனது பான் கார்டை தவறவிட்டேன். இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறேன். வேலை நிமித்தமாக எனக்கு எனது பான் கார்டு தேவைப்படுகிறது. யாரேனும் எனக்கு இது தொடர்பாக உதவ முடியுமா? நான் யாரை இதற்காக தொடர்பு கொள்ள வேண்டும்?” என ட்வீட் செய்துள்ளார்.
அதற்கு இந்திய வருமான வரித்துறை ரிப்ளை செய்துள்ளது. அதில் மீண்டும் பான் கார்டை பெறுவதற்கான வழி என்ன என்பது குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பீட்டர்சனுக்கு பான் விவரம் தெரியவில்லை எனில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் கொடுத்துள்ளது வருமான வரித்துறை.