"ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்தான் அதிகம் பார்க்கப்படுகிறது" - இன்சமாம்

"ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்தான் அதிகம் பார்க்கப்படுகிறது" - இன்சமாம்
"ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்தான் அதிகம் பார்க்கப்படுகிறது"  - இன்சமாம்

ஆஷஸ் தொடரைவிட இந்தியா - பாதிஸ்தான் இடையிலான போட்டிகளைதான் ரசிகர்கள் அதிகம் பேர் பார்க்கிறார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

"ஸ்போர்ட்ஸ் ஸ்டார்"க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் "ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளைதான் ரசிகர்கள் அதிகம் விரும்பி மகிழ்ச்சியுடன் பார்த்துள்ளனர். இரு நாடுகள் இடையே அடிக்கடி போட்டி நடைபெற வேண்டும். அதற்கு ஆசிய கோப்பை போட்டி மட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெற வேண்டும்" என்றார்.

மேலும் பேசிய அவர் "எங்களுடைய காலத்தில் ஆசியக் கோப்பை தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய பலத்தை காட்ட முயற்சி செய்வார்கள். இதுபோன்ற நிறையப் போட்டிகள் நடைபெறும் போது வீரர்களின் திறனும் மேன்மை பெரும். இந்தியா விளையாடுகிறது என்றால் பாகிஸ்தான் வீரர்கள் எப்போதும் தங்களது முழு திறமையும் காட்ட முயற்சி செய்வார்கள். அவர்களுக்கு அந்தப் போட்டியின் முக்கியத்துவம் தெரியும். அதனால் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் தொடர வேண்டும்" என்றார் இன்சமாம் உல் ஹக்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com