"அவரை தனியா விடுங்க சரியாகிடுவார்" - கோலிக்கு அட்வைஸ் சொன்ன இஷாந்த் சர்மா.. என்ன காரணம்?

"அவரை தனியா விடுங்க சரியாகிடுவார்" - கோலிக்கு அட்வைஸ் சொன்ன இஷாந்த் சர்மா.. என்ன காரணம்?
"அவரை தனியா விடுங்க சரியாகிடுவார்" - கோலிக்கு அட்வைஸ் சொன்ன இஷாந்த் சர்மா.. என்ன காரணம்?

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரின் ஒரு இன்னிங்ஸில் பும்ரா சரியாக பந்துவீசாதது கோலிக்கு ஏமாற்றத்தை அளித்ததாகவும் அதனைத் தொடர்ந்து தான் அவருக்கு செய்த அறிவுரை குறித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் ஜஸ்ப்ரீத் பும்ரா. அந்த ஆண்டே இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக உருவானார். அந்தாண்டு மட்டும் அவர் 48 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது ஆவரேஜ் 21 21.02 ஆக இருந்தது. அந்த ஆண்டு பும்ராதான் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரும் கூட. ஆனால் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அவரால் சிறந்த பந்துவீச்சை வழங்க முடியவில்லை. இதனால் அப்போதைய கேப்டன் விராட் கோலி அதிருப்தியடைந்தார்.

இது குறித்து கிரிக்பஸ் இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள இஷாந்த் சர்மா "2018 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸட் தொடர் என நினைவிருக்கிறது. அதில் ஒரு போட்டியில் தன்னுடைய முதல் ஸ்பெல்லில் பும்ரா சரியாக பந்துவீசவில்லை. இதனால் கோலி மிகவும் கோபமடைந்தார், அதிருப்தியாகவும் இருந்தார். அவர் என்னிடம் வந்து நீங்கள் பும்ராவிடம் சென்று பேசங்கள் அடவைஸ் சொல்லுங்கள் என கேட்டார். அதற்கு நான் அவரிடம் 'பும்ரா ஸ்மார்ட்டான பந்துவீச்சாளர். அவரை கொஞ்ச நேரம் தனிமையில் விடுங்கள். என்ன செய்வதென்று அவருக்கே தெரியும்'.

மேலும் பேசிய இஷாந்த் சர்மா " பும்ரா ஒருநாள் மிகப்பெரிய வீரராக வருவார் என அப்போதே கணித்திருந்தேன். அவர் ஒரு போட்டியை நன்றாக புரிந்து வைத்திருப்பார், போட்டியில் சூழ்நிலையை சரியாக கையாள்வார். டெஸ்ட் போட்டியில் ஒரு ஸ்பெல்லில் சிறப்பாக பந்துவீசவில்லை என்றால் அடுத்த ஸ்பெல்லிலேயே விக்கெட்டுகளை எளிதாக எடுக்கலாம். அதனை சரியாக செய்வார் பும்ரா" என புகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு அந்த டெஸ்ட் தொடரில் மட்டுமே 4 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com