டாஸ் வென்ற இந்தியா: மூத்த வீரர்கள் இல்லாத நியூசி.; பலம் வாய்ந்த இந்தியாவை சமாளிக்குமா?

டாஸ் வென்ற இந்தியா: மூத்த வீரர்கள் இல்லாத நியூசி.; பலம் வாய்ந்த இந்தியாவை சமாளிக்குமா?
டாஸ் வென்ற இந்தியா: மூத்த வீரர்கள் இல்லாத நியூசி.; பலம் வாய்ந்த இந்தியாவை சமாளிக்குமா?

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹைத்ராபாத், ராஜிவ் காந்தி இண்டர்நேசனல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடவிருக்கிறது. பாகிஸ்தானில் அபாரமான தொடர் வெற்றிக்கு பிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியில் மூத்தவீரர்கள் பலர் இல்லாமல், இளம் வீரர்களோடு களம் காண்கிறது. என்ன தான் இளம் வீரர்களுடன் களமிறங்கினாலும், நடைபெறவிருக்கும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்தியாவில் ஒருநாள் தொடரை ஆடுவது நியூசிலாந்து அணிக்கு முக்கியமான தொடராகவே பார்க்கப்படுகிறது.

டிம் சவுத்தி, டிரெண்ட் போல்ட், கேன் வில்லியம்சன் இல்லை!

டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் சவுத்திக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டிரெண்டு போல்ட், மத்திய காண்ட்ராக்ட் இன்னும் போடபடாததால் ஐக்கிய அரவு எமிரேட்ஸில் நடைபெறும் ஐஎல் டி20 லீக்கில் பங்குபெற்று விளையாடிவருகிறார்.

ஒருநாள் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து அணியின் பிரைம் ஸ்பின்னரான இஷ் சோதிக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவரும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை டிம் லாதம் ஏற்றுள்ளார். அவர் தலைமையில் முழுக்க முழுக்க இளம் வீரர்கள் சவால் நிறைந்த இந்திய அணியை எதிர்கொள்கின்றனர். ஆனால் வேகப்பந்துவீச்சுக்கு அணிக்குள் மீண்டும் லாக்கி பெர்குசன் இடம்பெற்றுள்ளார்.

டாஸ்வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com