\
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர்: பி.வி.சிந்து, லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர்: பி.வி.சிந்து, லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர்: பி.வி.சிந்து, லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
Published on: 

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து மற்றும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற லக்ஷயா சென் என இருவரும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளனர். சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவிலும், லக்ஷயா சென் ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். 

கடந்த 11-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் வரும் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் சுற்று, இரண்டாவது சுற்று, காலிறுதி என இந்த தொடரில் இதுவரை சிந்து விளையாடி உள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகளை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றுள்ளார். அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனை Supanida Katethong உடன் விளையாடுகிறார் சிந்து. மகளிர் ஒற்றையர் பிரிவில் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை Aakarshi Kashyap, தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொள்கிறார். 

மறுபக்கம் லக்ஷயா சென் முதல் சுற்றில் எகிப்து வீரர், இரண்டாவது சுற்றில் ஸ்வீடன் வீரர், காலிறுதியில் இந்திய வீரர் பிரனாயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com