ஒரு வெற்றியில் சாதனையை தவறவிட்ட இந்திய அணி

ஒரு வெற்றியில் சாதனையை தவறவிட்ட இந்திய அணி

ஒரு வெற்றியில் சாதனையை தவறவிட்ட இந்திய அணி
Published on

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா நூலிழையில் தவறவிட்டுள்ளது. 

2017-ம் ஆண்டில் அதிக வெற்றிகள் குவித்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. மொத்தம் 53 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 37 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. டெஸ்ட்(7), ஒருநாள் போட்டி(21), டி20 (9) என எல்லா வகையான போட்டிகளிலும் அதிக போட்டிகளிலும் அதிக வெற்றிகள் குவித்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

இருப்பினும், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற சாதனையை ஒரே ஒரு வெற்றியில் இந்திய அணி தவறவிட்டுள்ளது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2003-ம் ஆண்டு 38 போட்டிகளில் வெற்றி பெற்றதே இன்றளவும் சாதனையாக உள்ளது. ஆஸ்திரேலிய அணி 47 போட்டிகளில் விளையாடி இந்தச் சாதனையை படைத்துள்ளது. தற்போது இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்திய அணி இந்த ஆண்டில் இங்கிலாந்து(ஒருநாள்&டி20), வங்கதேசம்(டெஸ்ட்), ஆஸ்திரேலியா(டெஸ்ட்&ஒருநாள்), வெஸ்ட் இண்டிஸ்(ஒருநாள்), இலங்கை(டெஸ்ட், ஒருநாள்&டி20), நியூசிலாந்து(ஒருநாள்&டி20) மற்றும் இலங்கை(டெஸ்ட், ஒருநாள்&டி20) அணிகளுக்கு எதிராக பல்வேறு தொடர்களை கைப்பற்றியுள்ளது. இதில் பெரும்பாலும் இந்தியாவில் விளையாடிய போட்டிகள். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி பாகிஸ்தானிடம் இறுதிப்போட்டியில் தோற்றது.

தொடர்கள் மற்றும் வெற்றி, தோல்வி விவரம்:-  


இந்திய அணி தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களையும், 8 ஒருநாள் தொடர்களையும் கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ளது. 

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸ்ர்கள் அடித்த அணி என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 260/5 எடுத்த போது இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த அணி அந்த போட்டியில் 21 சிக்ஸர்கள் அடித்தது.  

2018-ம் ஆண்டின் தொடக்கம் இந்தியாவுக்கு சவால் நிறைந்தது. பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவுடன் அந்நாட்டு மண்ணில் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் ஆடுகிறது. டெஸ்ட் தொடர் ஜனவரி 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com