“ஓய்வு முடிவை எடுக்க வேண்டாம் தோனி” - லதா மங்கேஷ்கரின் பழைய பதிவை பகிரும் ரசிகர்கள்

“ஓய்வு முடிவை எடுக்க வேண்டாம் தோனி” - லதா மங்கேஷ்கரின் பழைய பதிவை பகிரும் ரசிகர்கள்
“ஓய்வு முடிவை எடுக்க வேண்டாம் தோனி” - லதா மங்கேஷ்கரின் பழைய பதிவை பகிரும் ரசிகர்கள்

‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என போற்றப்படும் பாடகி லதா மங்கேஷ்கர் ஞாயிறு அன்று காலமானார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிக்க வேண்டாம் என அவர் ட்விட்டர் மூலம் கேட்டுக் கொண்டதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ஆதரவாளரான லதா மங்கேஷ்கர் இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் தவறாமல் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். கடந்த 2019 50-ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது. அப்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற உள்ளதாக பேசப்பட்டு வந்தது. அந்த சமயத்தில்தான் தோனிக்கு ட்வீட் மூலம் லதா மங்கேஷ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

“வணக்கம், தோனி. நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக நான் கேள்விப்பட்டேன். தயை கூர்ந்து அப்படி ஒரு முடிவை நீங்கள் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவுக்கு உங்கள் ஆட்டம் தேவை. இது எனது தனிப்பட்ட விருப்பமும் கூட” என தெரிவித்துள்ளார் மறைந்த லதா மங்கேஷ்கர். 

தோனி கடந்த 2020 ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com