இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு 136 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மட்டும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணி 18 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குனரத்னே 36, சமரவிக்ரமா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ஷானகா 29, தனஞ்ஜெயா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். உனத்காட், பாண்ட்யா தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல் டி20 போட்டியில் களமிறங்கிய வாஷிங்டர் சுந்தர் ஒரு விக்கெட் எடுத்தார். இதனையடுத்து 136 ரன்கள் என்ற இலக்கு இந்திய அணி விளையாடி வருகிறது.