“அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்குள் இந்திய அணி இதை சரி செய்ய வேண்டும்” - லக்ஷ்மண்!

“அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்குள் இந்திய அணி இதை சரி செய்ய வேண்டும்” - லக்ஷ்மண்!

“அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்குள் இந்திய அணி இதை சரி செய்ய வேண்டும்” - லக்ஷ்மண்!
Published on

இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்குள் அணியில் உள்ள இந்த இரண்டு முக்கிய இடங்களுக்கான இடைவெளியை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மண். 

“அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்து வரும் ஒரு ஆண்டுக்குள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி டி20 ஆட்டத்தை அணுகும் முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். 50 ஓவர் போட்டிகளை போல இதை விளையாட முடியாது. 

அணியில் உள்ள அனைவரையும் முழு மனதுடன் ஊக்கம் கொடுத்து அரவணைத்து செல்லும் பணியை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மா செய்தாக வேண்டும். 

மறுபக்கம் ஆடும் லெவனில் இடம் பெறும் வீரர்களில் இரண்டு கேப் (இடைவெளி) இருப்பதாக நான் பார்க்கிறேன். அதில் முன்னுரிமை மிக்க வீரராக மிதமான வேகத்தில் பந்து வீசக் கூடிய பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியுள்ளது. அது ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக அல்ல என்பதை கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்ய வேண்டும். இது கேப்டன் தனது ஆடும் லெவனை எந்தவித அழுத்தமும் இன்றி தேர்வு செய்ய உதவும்” என அவர் தெரிவித்துள்ளார். 

அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com