மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி! 2-1 என தொடரை வென்றது!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி! 2-1 என தொடரை வென்றது!
மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி! 2-1 என தொடரை வென்றது!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா இருபது  ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது. அந்த இலக்கை விரட்டிய இந்திய அணிக்காக, கே.எல்.ராகுல் மற்றும் தவான் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் ஓவரை மேக்ஸ்வெல் வீசியிருந்தார். இரண்டு பந்துகளை சந்தித்த ராகுல் பெரிய சிக்ஸரை டீப் மிட் விக்கெட் திசையில் அடிக்க முயன்று ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இருப்பினும் தவானுடன் இணைந்து 74 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் கோலி. 

தவான் 28 ரன்களுக்கு வெளியேற தொடர்ந்து வந்த சாம்சன், ஷ்ரேயஸ் மாதிரியான பேட்ஸ்மேன்கள் சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். 18 பந்துகளில் 43 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் 20 ரன்களுக்கு அவுட்டாக ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பக்கமாக திரும்பியது. அடுத்த ஓவரிலேயே கேப்டன் கோலியும் 85 ரன்களுக்கு அவுட்டாக இந்தியாவின் தோல்வி உறுதியானது. ஷர்துள் தாக்கூர் கடைசி கட்டத்தில் 2 சிக்ஸர்களை அடித்திருந்தார்.

இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது இந்தியா. ஆஸ்திரேலியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும் இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. அடுத்ததாக இந்தியா வரும் 17 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com