ஐசிசி டெஸ்ட் தரவரிசை : 2016க்கு பின் முதலிடத்தை இழந்த இந்தியா..!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : 2016க்கு பின் முதலிடத்தை இழந்த இந்தியா..!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : 2016க்கு பின் முதலிடத்தை இழந்த இந்தியா..!
Published on

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது.

ஐசிசி நிர்வாகம் சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் முதலிடத்தை ஆஸ்திரேலிய அணி பிடித்துள்ளது. 2ஆம் இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. ஆனால் முதல் மூன்று இடத்தில் உள்ள அணிகளுக்கு வித்தியாசம் ஒரு புள்ளி மட்டும் தான்.

ஆஸ்திரேலிய அணி 116 ரேட்டிங் உடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக 115 ரேட்டிங்குடன் நியூசிலாந்து 2ஆம் இடத்திலும், 3ஆம் இடத்தில் இந்தியா 114 ரேட்டிங்கை பெற்றும் உள்ளன. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து (105), இலங்கை (91), தென்னாப்பிரிக்கா (90), பாகிஸ்தான் (86), வெஸ்ட் இண்டீஸ் (79) அணிகள் இருக்கின்றன.

இந்திய அணி 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் மூன்றரை வருடங்களுக்குப் பின்னர் முதலிடத்தை இழந்துள்ளது. அதுவும் 2 புள்ளிகள் தான் வித்தியாசம். 2003ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் தரவரிசை கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் முதல் 3 இடத்தில் இருக்கும் அணிகள் ஒரு புள்ளி இடைவெளியுடன் இருப்பது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முறையே ஒரு புள்ளி இடைவெளியுடன் முதல் மூன்று இடத்தை பிடித்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com