விளையாட்டு
உலக ஹாக்கி லீக் தொடர்: இந்திய அணியில் சர்தார் சிங் நீக்கம்
உலக ஹாக்கி லீக் தொடர்: இந்திய அணியில் சர்தார் சிங் நீக்கம்
உலக ஹாக்கி லீக் தொடருக்கான இந்திய அணியில் இருந்து சர்தார் சிங் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உலக ஹாக்கி லீக் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மன்பிரீத் சிங் தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணியில் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான சர்தார் சிங் இடம் பெறவில்லை. உடல் தகுதி பெற்ற ருபிந்தர்பால் சிங், பிரேந்திர லக்ரா ஆகியோர் மீண்டும் அணிக்கு தேர்வாகியுள்ளனர். உலக ஹாக்கி லீக் போட்டி புவனேஸ்வரில் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்குகிறது.