\
கபில் பர்மார்
கபில் பர்மார்முகநூல்

பாராலிம்பிக்கில் பதக்க வேட்டையில் இறங்கிய இந்தியா! 25 ஆக உயர்ந்த பதக்க எண்ணிக்கை!

பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேலும் பதக்கம் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா வென்ற பதக்கத்தின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
Published on

பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேலும் பதக்கம் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா வென்ற பதக்கத்தின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

ஆண்கள் பாரா ஜூடோவில் 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் கபில் பர்மார், பிரேசிலின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்கொண்டார். இதில் கபில் பர்மார் 10க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

இது பாராலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் ஜூடோவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும். இதன்மூலம், 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 25 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 16வது இடத்தில் இந்தியா உள்ளது. முன்னதாக நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அரவிந்த் மாலிக் 6ஆவது இடம்பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

கபில் பர்மார்
உகாண்டா | காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை பரிதாபமாக மரணம்!

இன்றைய தினம் ஆண்களுக்கான ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், மகளிருக்கான பளுதூக்குதல் 67 கிலோ எடைப்பிரிவு, ஈட்டி எறிதல் ஆகியவற்றின் இறுதிப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com