தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது இந்திய அணி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சர்வதேச ஒருநாள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. ஆனால் 4-வது நாள் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது. இதனால், முதலிடத்தை இழந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
இந்த வெற்றியின் மூலம் 120 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி 119 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. சிறப்பாக விளையாடி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்திய அணி டெஸ்ட் தர வரிசையிலும் முதலிடத்தில் உள்ளது.
முன்னதாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி இருந்தது. அதேபோல் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர் வெற்றிகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.