ரொனால்டோ, மெஸ்சி... இளம் வீரர்களுக்கு விஜயன் அட்வைஸ்!

ரொனால்டோ, மெஸ்சி... இளம் வீரர்களுக்கு விஜயன் அட்வைஸ்!

ரொனால்டோ, மெஸ்சி... இளம் வீரர்களுக்கு விஜயன் அட்வைஸ்!
Published on

இந்திய அணியின் இளம் கால்பந்து வீரர்களிடம் அதிகமாக நம்பிக்கை இருக்கிறது என்று முன்னாள் கால்பந்து வீரர் விஜயன் கூறினார்.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான (பிபா) 17 வயதுக்குட்படோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முதன்முறையாக இந்தியாவில் நடத்துகிறது. இந்தப் போட்டிகள் நாளை தொடங்குகிறது.

இதில் பங்கு பெறும் இளம் இந்திய கால்பந்து வீரர்களை முன்னாள் கால்பந்து வீரரும் நடிகருமான ஐ.எம்.விஜயன் சந்தித்து பேசினார். இந்தியாவுக்காக 79 போட்டிகளில் விளையாடியுள்ள விஜயன், கூறும்போது, ’இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக பயிற்சிபெற்றிருக்கிறார்கள். அவர்களிடம் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. அவர்களை உற்சாகப்படுத்தத்தான் சந்தித்தேன். ’இதற்கு முன் இப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லை; அதனால் இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றேன். ரொனால்டோ, மெஸ்சி போன்றோர் இது போன்ற தளத்தில் இருந்துதான் வந்தார்கள் என்று சொன்னேன்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com