\
டி20 தொடரை தக்கவைக்குமா இந்தியா? - இன்று இங்கிலாந்துடனான 4ஆவது போட்டி!

டி20 தொடரை தக்கவைக்குமா இந்தியா? - இன்று இங்கிலாந்துடனான 4ஆவது போட்டி!

டி20 தொடரை தக்கவைக்குமா இந்தியா? - இன்று இங்கிலாந்துடனான 4ஆவது போட்டி!
Published on

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-ஆவது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே நடைபெற்ற 3 போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இன்றையப் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றால் தொடரை இழக்காது என்ற நிலையில் இந்த ஆட்டம் இந்தியாவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வென்றால், தொடரை கைப்பற்றிவிடும். அகமதாபாத்தை பொறுத்தவரை இன்றைய ஆட்டத்திலும் டாஸின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் எனத் தெரிகிறது. அகமதாபாத் மைதானத்தில் கடந்த 3 ஆட்டங்களிலுமே சேஸிங் செய்த அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியை அணியை பொருத்தவரை இன்றையப் போட்டியிலும் கேஎல் ராகுல் விளையாடுவார் எனக் கோலி கூறியுள்ளார். அதனால் அணியில் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தோன்றுகிறது. இங்கிலாந்து அணியைப் பொருத்தவரையிலும் பெரியளவில் மாற்றம் இருக்காது என்றே கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com