\
தொடரை கைப்பற்றுமா இந்தியா?: இலங்கையுடன் இன்று 3-வது டி20

தொடரை கைப்பற்றுமா இந்தியா?: இலங்கையுடன் இன்று 3-வது டி20

தொடரை கைப்பற்றுமா இந்தியா?: இலங்கையுடன் இன்று 3-வது டி20
Published on


இந்தியா இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில்‌, இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இலங்கை அணியும், கடைசி போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. புனேவில் இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் இலங்கை அணி இன்று நடைபெறும் போட்டியில் எழுச்சி பெறுமா என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com