நியூசிலாந்தை வெல்லுமா இந்தியா ? இன்று முதல் டி20 போட்டி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் ஆக்லாந்தில் இன்று தொடங்குகிறது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 இருபது ஓவர் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் இருபது ஓவர் போட்டி இந்திய நேரப்படி மதியம் 12 மணியளவில் தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்ற உற்சாகத்தில் களமிறங்கவுள்ளது. காயத்தினால் விலகிய ஷிகர் தவானுக்கு பதிலாக இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்தாண்டு இறுதியில் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை இந்திய அணி திறம்பட பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.