முழு பலத்துடன் களம் காணும் இந்தியா ! பழி தீர்க்க காத்திருக்கும் பாகிஸ்தான்

முழு பலத்துடன் களம் காணும் இந்தியா ! பழி தீர்க்க காத்திருக்கும் பாகிஸ்தான்

முழு பலத்துடன் களம் காணும் இந்தியா ! பழி தீர்க்க காத்திருக்கும் பாகிஸ்தான்
Published on

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் லீக் சுற்றுகள் இன்றுடன் முடிவடைந்து சூப்பர் 4 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே நேற்றைய போட்டியில் ஹாங்காங்கை போராடி வென்ற இந்தியா பலம்வாய்ந்த பாகிஸ்தானை இன்று எப்படி எதிர்கொள்ள இருக்கிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இங்கிலாந்தில் மிக நீண்ட தொடரில் பங்கேற்றதால் விராட் கோலிக்கு ஆசியக் கோப்பையில் ஓய்வளிக்கப்பட்டு, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசியக் கோப்பை போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்திய - பாகிஸ்தான் இந்த இரு அணியும், இதுவரை நடைபெற்ற ஆசியக் கோப்பைகளில் எப்படி விளையாடியுள்ளது, எந்த அணி அதிக வெற்றியை பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 12 முறை ஆசியக் கோப்பை போட்டியில் சந்தித்துள்ளன. அதில் இந்தியா 6 போட்டிகளிலும், பாகிஸ்தான் 5 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன.

இதில் ஒரு போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது. ஆசியக் கோப்பையை இந்தியா 6 முறை வென்று சாம்பியனாகி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் 2 முறை மட்டுமே வென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டிகளில் விராட் கோலிதான் பெஸ்ட் மேட்ஸ்மேனாக இருந்து இருக்கிறார். ஆசியக் கோப்பைகளில் மொத்தமாக அவர் 459 ரன்கள் குவித்துள்ளார். அதில் இரண்டு சதங்களும் அடங்கும். பாகிஸ்தான் அணியில் முகமது ஹஃபீஸ் 437 ரன்களை குவித்துள்ளார். பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர் குமாரும், இஷாந்த் சர்மாவும் தலா 11 விக்கெட்டுகளை ஆசியக் கோப்பையில் கைப்பற்றியுள்ளனர்.

இப்போது நாளை ஆசியக் கோப்பை போட்டியில் 13 வது முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற. இதில் ஆறாவது வெற்றியை பெற்று இந்தியாவின் வெற்றியை சமன் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முழு மூச்சாக களமிறங்கும் என தெரிகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் தோல்வியுடன் திரும்பி இருக்கும் இந்திய அணி விராட் கோலி இல்லாமல் களமிறங்குகிறது. ஹங்காங்குக்கு எதிரான போட்டியில் புகுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா தனது முழு பலத்துடன் களமிறங்கும். ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, மணீஷ் பாண்டே ஆகியோருக்கு இன்றையப் போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com