"இந்திய அணி 'டோட்டல் வேஸ்ட்' பாகிஸ்தானை சந்திக்க தகுதியில்லை" - ஷோயப் அக்தர் காட்டம்

"இந்திய அணி 'டோட்டல் வேஸ்ட்' பாகிஸ்தானை சந்திக்க தகுதியில்லை" - ஷோயப் அக்தர் காட்டம்
"இந்திய அணி 'டோட்டல் வேஸ்ட்' பாகிஸ்தானை சந்திக்க தகுதியில்லை" - ஷோயப் அக்தர் காட்டம்

பாகிஸ்தானை மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் இறுதிபோட்டியில் சந்திக்க இந்திய அணிக்கு தகுதி இல்லை என்றும், இந்திய கிரிக்கெட் தற்போது மோசமான நிலையில் இருப்பதாகவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் சாடியுள்ளார்.

பந்துவீச்சாளர்களிடம் ஆக்ரோஷமான அனுகுமுறையும் இல்லை, இங்கிலாந்துக்கு எதிரான எந்த பிளானுமே இல்லை என்றும், இந்தியா உலகக்கோப்பையில் இருந்து வெளியேற மோசமான பந்துவீச்சு தான் காரணம் என்றும், அதற்கு முழுபொறுப்பு கேப்டன் மற்றும் இந்திய அணி நிர்வாகம் தான் என்று குறிப்பிட்டுள்ளார் ஷோயப் அக்தர்.

2022 டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்த இந்திய அணியை சாடியுள்ள அக்தர், ” எம்சிஜி மைதானத்தில் இறுதிபோட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவோ அல்லது விமானத்தில் மெல்போர்ன் வரவோ கூட இந்தியாவுக்குத் தகுதி இல்லை, ஏனெனில் அவர்களின் கிரிக்கெட்டின் தரம் இன்று அம்பலமாகிவிட்டது. அரையிறுதிக்கு செல்வது பெரிய விஷயமில்லை. இந்திய கிரிக்கெட், இப்போது மிக மோசமான நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தியா அவர்களின் கேப்டன்சியைப் பார்க்க வேண்டும், நிர்வாகம் மட்டுமே இதற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அணியில் முகமது ஷமியைத் தேர்ந்தெடுத்ததில் தொடங்கி, யுஸ்வேந்திர சாஹலைத் தவிர்த்தது வரை, இந்தியாவின் பந்துவீச்சு குறித்து தாக்கி பேசியுள்ள அவர், “ திடீரென்று அவர்கள் ஷமியை அணியில் சேர்த்தனர், அவர் ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளர் தான், ஆனால் டி20க்கான அணியில் இருக்க தகுதி இல்லை. இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் விளையாடிய நிலையில், ஏன் சாஹல் ஏன் விளையாடக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.

மற்றும் ஒரு பிளாட் பிட்சுக்கு தகுந்த வேகப்பந்துவீச்சு இந்திய அணியிடம் இல்லை என்பதை உணர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி எளிதாக வெற்றிபெற்றது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே தான் சிறப்பாக வீசுவதில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். மற்றபடி எந்த ஆக்ரோஷமான அணுகுமுறையும், திட்டமும் அவர்களிடம் இல்லவே இல்லை என்று சாடியுள்ளார்.

பல மாற்றங்களை இந்திய அணி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், இந்திய அணி டி20 கிரிக்கெட் கேப்டன்சியை ஹர்திக் பாண்டியாவிடமிருந்து தொடங்கலாம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com