முதல் நாளிலேயே அடங்கிய இங்கிலாந்து ! விஸ்வரூபம் எடுத்த இந்தியா

முதல் நாளிலேயே அடங்கிய இங்கிலாந்து ! விஸ்வரூபம் எடுத்த இந்தியா

முதல் நாளிலேயே அடங்கிய இங்கிலாந்து ! விஸ்வரூபம் எடுத்த இந்தியா
Published on

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார். பார்ஸ்டோவை 6 ரன்னில் பும்ரா வெளியேற்ற, குக்கை 17 ரன்னில் பாண்ட்யா அவுட் ஆக்கினார். 

அதேபோல், முந்தைய போட்டியில் இந்திய அணியை மிரட்டிய ஸ்டோக்ஸ், பட்லர் ஜோடியை முகமது சமி வெளியேற்றினார். இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனால், அந்த அணி 120 ரன்னிற்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொயின் அலி, கர்ரன் ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதோடு, ரன்களையும் அவ்வவ்போது எடுத்தனர்.

இதனால், இங்கிலாந்து அணி சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தது. 38.3 ஓவரில் 100 ரன்னும், 53.4 ஓவரில் 150 ரன்னும் இங்கிலாந்து எட்டியது. இந்தக் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்தது. இந்த நேரத்தில் தான் இங்கிலாந்து அணி 167 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்து வீச்சில் மொயின் அலி 40 ரன்னில் கேட்சாகி ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டுக்கு பிறகு தான் இந்திய அணி ரிலாக்ஸ் ஆனது. பின்னர், ரஷித் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அஸ்வின் வீசிய 69வது ஓவரில் கர்ரன் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி 70 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்தது. பின்னர் பிராட் 17 ரன்னில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய கர்ரன் 78 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் 246 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி 86 ரன்னிற்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், மொயின் அலி, கர்ரன் சிறப்பான ஆட்டத்தால் 246 ரன் எடுத்துள்ளது.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது சமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழக்காமல் 19 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவானும், ராகுலும் களத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com