மேட்ச்சை தீர்மானிக்கும் பிட்ச் - இந்தியாவின் வியூகம் கைகொடுக்குமா?

மேட்ச்சை தீர்மானிக்கும் பிட்ச் - இந்தியாவின் வியூகம் கைகொடுக்குமா?

மேட்ச்சை தீர்மானிக்கும் பிட்ச் - இந்தியாவின் வியூகம் கைகொடுக்குமா?
Published on

இங்கிலாந்து அணியை ஒருநாள் போட்டியில் வீழ்த்துவதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கிங் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நோட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரண்டு போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பை கைப்பற்றும். ஏற்கெனவே நடந்த முடிந்துள்ள டி20 தொடரில் 3 போட்டிகளில் 2 போட்டிகள் வென்று இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்காக இந்திய அணி வகுத்த வியூங்கள் பல. இங்கிலாந்து பேட்டிங்கில் திறமையை காட்டினால், அதை சுழல் பந்தை வைத்து இந்திய அணி மடக்கியது.

இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய போது, இந்திய அணியும் அதை மிஞ்சும் வகையில் பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இருப்பினும் ஆட்டத்தின் வெற்றியை நிர்ணயிப்பதில் டாஸ் ஒரு முக்கிய பங்கு வகித்தது. டாஸ் வெல்லும் அணிக்கு வெற்றி சற்று சாதமாகவே இருந்தது. அத்துடன் விளையாடும் மைதானத்தின் பிட்ச் வெற்றி திசை திருப்பும் வகையில் இருந்தது. டி20 போட்டிகளில் இந்திய அணியின் சுழல் எடுபடும் போது, இங்கிலாந்து அணியின் சிறப்பான பேட்ஸ்மேன்கள் கூட அவுட் ஆகி நடையைக்கட்டினர். 

இவ்வாறு இந்திய அணியின் வெற்றி வீரர்களால் மட்டுமல்லாமல், வியூங்களாலும் அமைந்தது. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள ஒருநாள் போட்டியில் மட்டுமின்றி, இந்தத் தொடரையே கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. ஏனெனில் இந்தத் தொடரை வெல்வதன் மூலம் தான் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடிப்பது அடங்கியுள்ளது. இன்று விளையாடும் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில், சுழல் பந்து நன்றாக எடுபடும் என ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் சாஹல் மற்றும் குல்தீப் என இரு சுழல் மன்னன்கள் உள்ளனர். எனவே பந்துவீச்சில் இந்திய அணிக்கு எந்தக் குறையும் இருக்காது எனக் கருதப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் இங்கிலாந்தை வெல்ல சிறப்பான பேட்டிங் மற்றும் திறமையான ஃபீல்டிங் மட்டுமே முக்கியம் என்பதால், அந்த இரண்டு பயிற்சியிலும் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com