வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க இருந்த இந்திய வீரர்கள் 4 பேர் உள்பட 7 பேருக்கு கொரோனா
இந்திய கிரிக்கெட் அணி வரும் 6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பவுலர் சைனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியில் 4 வீரர்கள் மற்றும் 3 நிர்வாகிகள் என 7 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது அகமதாபாத் நகரில் முகாமிட்டுள்ளது. இந்த நிலையில் வீரர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதால் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. வீரர்கள் தொற்று பாதிப்பிலிருந்து குணமடையும் வரையில் தனிமையில் இருப்பார்கள் எனவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.