தர்மசாலா டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம்

தர்மசாலா டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம்
தர்மசாலா டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

தர்மசாலாவில் நடந்துவரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு முதல்நாளில் ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் ரன் கணக்கை துவங்கவில்லை. இரண்டாம் நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல், நடப்பு தொடரில் தனது 5ஆவது அரைசதத்தினைப் பதிவு செய்தார். அவர் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாராவும் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 57 ரன்களும், கேப்டன் ரஹானே 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அஸ்வின் 30 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இந்திய அணி 52 ரன்கள் பின்தங்கியுள்ளது. சாஹா 10 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com