\
கோலி, ரஹானே கேப்டன்சியின் வித்தியாசம் என்ன? - பரத் அருண் பதில்!

கோலி, ரஹானே கேப்டன்சியின் வித்தியாசம் என்ன? - பரத் அருண் பதில்!

கோலி, ரஹானே கேப்டன்சியின் வித்தியாசம் என்ன? - பரத் அருண் பதில்!
Published on

விராட் கோலி மற்றும் ரஹானேவின் கேப்டன்சியில் இருக்கும் வித்தியாசம் குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மனம் திறந்து பேசியுள்ளார்.

சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு பேசியுள்ள பரத் அருண் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் "ரஹானே மிகவும் அமைதியானவர். வெளியில் இருந்து பார்ப்பதற்கு ரஹானே அமைதியாக தெரிந்தாலும் உள்ளுக்குள் ரஹானே எப்போதும் பதற்றமாக இருப்பார். ஆனால் அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளமாட்டார். ஒவ்வொரு வீரரையும் ஊக்கப்படுத்துவார். மிக முக்கியமாக பவுலர்கள் தவறு செய்தால் அவர்களை கடிந்துக்கொள்ளமாட்டார்" என்றார்.

மேலும் பேசிய அவர் "ஆனால் கோலி அப்படியல்ல. பவுலர் 2 தவறான பந்துகளை வீசிவிட்டால் அவருக்கு கோபம் வந்துவிடும். ஆனால் அது அவருடைய ஆக்ரோஷம். பலர் கோலியின் ஆக்ரோஷத்தை, கோபம் என தவறாக புரிந்துக்கொள்வார்கள். ரஹானே கோபப்படமாட்டார் என்றாலும் அவரின் திட்டத்தை சரியான வழியில் செலுத்த திட்டமிடுவார், அதனை சரியாகவும் செய்வார்" என்றார் பரத் அருண்.

தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து பேசிய பரத் அருண் "ஒரு ஓவரில் பவுலர் 2 பவுண்டரிகளை கொடுத்துவிட்டால் ரவி சாஸ்திரி மிகவும் கோபப்படுவார். வீரர்களை ஓய்வறையில் கடுமையாக பேச ஆரம்பித்துவிடுவார். அவருக்கு பவுலர்கள் சரியாக பந்துவீச வேண்டும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்" என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com