பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர்: இந்தியா வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர்: இந்தியா வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர்: இந்தியா வெற்றி
Published on

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரை இந்திய அணி வெற்றி பெற்றது.

கஜகஸ்தானிலுள்ள நூர் சுல்தான் நகரில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்  நடைபெற்றது. இதில் நடந்த ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன் மற்றும் சுமித் நகல் ஆகிய இருவரும் தங்களது போட்டிகளில் வெற்றிப் பெற்றனர். 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜீவன் நெடுஞ்செழியன் இணை ‌6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பாகிஸ்தான் ஜோடியை வீழ்த்தியது. இதன்பின்னர் நடைபெற்ற கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் சுமித் நகல் பாகிஸ்தானின் யூசஃப் கலீலுக்கு எதிராக மோதினார். இந்தப் போட்டியில் சுமித் 6-1,6-0 என்ற நேர் செட்களில் அவர் வெற்றிப் பெற்றார்.

இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர் சுற்றை, இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com