கேட்ச் பிடிப்பதில் அசத்தலான அணி இந்தியா - மோசமானது பாகிஸ்தான்
உலகக் கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற போது பீல்டிங்க் நிறைய வீரர்கள் கேட்சுகளை சாதரணமாக கோட்டை விட்டனர். பீல்டிங் செய்யும் போதும் சொதப்பினர். அப்போது, சர்வதேச போட்டிகள் என்றால் இப்படி இருக்காது என்று விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளிலும் சில அணிகள் அதிகம் பீல்டிங்கில் சொதப்பி வருகின்றன. அதில் முதல் இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. பாகிஸ்தான் அணி வீரர்கள் இதுவரை 14 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டுள்ளனர். அதாவது தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் 35 கேட்சுகளை தவறவிட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து 12 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளது.
நியூசிலாந்து 9, தென்னாப்ரிக்கா 8, வெஸ்ட் இண்டீஸ் 6, ஆஸ்திரேலியா 4, பங்களாதேஷ் 4 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆப்கானிஸ்தான் அணி 2 கேட்சுகளை மட்டுமே தவறவிட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்திய அணி ஒரே ஒரு கேட்ச் மட்டும் கோட்டை விட்டு முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சாஹல் வீசிய பந்துவீச்சில் கே.எல்.ராகுல் ஒரு கேட்ச் கோட்டை விட்டார். இந்திய அணி பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.