வரலாற்றில் முதல் முறை.. 3 வடிவத்திலும் 'நம்பர் 1' டீம் இந்தியா! டாப்-க்கு சென்ற வீரர்கள்!

வரலாற்றில் முதல் முறை.. 3 வடிவத்திலும் 'நம்பர் 1' டீம் இந்தியா! டாப்-க்கு சென்ற வீரர்கள்!
வரலாற்றில் முதல் முறை.. 3 வடிவத்திலும் 'நம்பர் 1' டீம் இந்தியா! டாப்-க்கு சென்ற வீரர்கள்!

3 வடிவ கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசையிலும் முதல் இடத்தை பிடித்து, இதற்கு முன் எப்போதும் படைக்காத சாதனையை எட்டிப்பிடித்து, வரலாற்றில் தன் பெயரை பொறித்துள்ளது இந்திய அணி.

பார்டர் கவாஸ்கர் டிரோபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதற்கு பிறகு, உலக டெஸ்ட் ரேங்கிங் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்திருந்த ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி, நம்பர் 1 டெஸ்ட் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது இந்திய அணி.

வரலாற்றில் முதல்முறையாக 3 கிரிக்கெட் வடிவத்திலும் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்தியா!

இந்திய அணி ஏற்கனவே டி20 ரேங்கிங் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருந்த நிலையில், கடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை 3-0, 3-0 என இரண்டு அணிகளையும் இந்தியா ஒயிட்வாஸ் செய்ததை அடுத்து, ஒருநாள் தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்து அசத்தியது.

இந்நிலையில் டெஸ்ட் தரவரிசையில் மட்டும் தான் முதலிடத்தை தவறவிட்டிருந்தது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணி, தான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்து இருந்த நிலையில், இந்தியாவை விட டெஸ்ட் தரவரிசையில் முன்னிலையிலேயே இருந்து வந்தது. இதற்கிடையே தற்போது நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா என மூன்று பேரின் அசத்தலான ஆட்டத்தால், இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது இந்திய அணி.

இதனால் பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டிக்கு பிறகு, தற்போது வெளியிடப்பட்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது இந்திய அணி. இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய இரண்டாவது இடத்திலும், 106 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3ஆவது இடத்தையும் அடுத்தடுத்து பிடித்துள்ளன. டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்த நிலையில், டி20, ஒடிஐ மற்றும் டெஸ்ட் என 3 வடிவங்களில் ஒரே நேரத்தில் நம்பர் 1 அணியாக முன்னேறியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

ரோகித் சர்மா படைத்த சாதனை - ரேங்கிங்கில் டாப்பிற்கு சென்ற இந்திய வீரர்கள்

இந்தியாவை 3 வடிவ கிரிக்கெட்டிலும் ஒரே நேரத்தில் நம்பர் 1 அணியாக மாற்றிய பெருமை கேப்டன் ரோகித் சர்மாவிற்கே சேரும். அந்தவகையில் முதல் இந்திய கேப்டனாக இந்த சாதனையை படைத்திருக்கிறார் ரோகித் சர்மா.

வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் ஜடேஜா ஆல்ரவுண்டர்களுக்கான வரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். மேலும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 16ஆவது இடத்தில் நீடிக்கிறார் ஜடேஜா.

8 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திர அஸ்வின், டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்ள நிலையில், 21 புள்ளிகள் வித்தியாசத்துடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் அஸ்வின்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 1 விக்கெட் மற்றும் 80 ரன்கள் விளாசிய அக்சர் பட்டேல் டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 7ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பேட்டிங்க் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 8ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com