U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி
Published on

தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர் ஜெய்ஸ்வால்‌ 59 ரன்களும், கேப்டன் ப்ரியம் கார்க் 56 ரன்களும், துருவ் ஜுரல் 52 ரன்களும் எடுத்த‌னர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 45.2 ஓவரில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை சந்தித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிபுன் தனஞ்ஜெயா 50 ரன்‌களும், ரஷந்தா 49 ரன்களும் எடுத்தனர். நாளை நடைபெறவுள்ள 2ஆவது போட்டியில் ஜப்பானை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com