\
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா கோல் மழை

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா கோல் மழை

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா கோல் மழை
Published on: 
ஒடிசாவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி, 13க்கு 1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.
புவனேஸ்வரத்தின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும், கனடாவும் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தது. துணை கேப்டன் சஞ்சய் மற்றும் அரஜித் சிங் ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்தனர். இந்திய அணி 13 கோல்கள் அடித்த நிலையில், கனடா ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிரான்சிடம் 4க்கு5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com