37 ஆண்டுகளுக்குப் பின் மெல்பர்னில் வெற்றி - கோலி படையின் சாதனைகள்

37 ஆண்டுகளுக்குப் பின் மெல்பர்னில் வெற்றி - கோலி படையின் சாதனைகள்

37 ஆண்டுகளுக்குப் பின் மெல்பர்னில் வெற்றி - கோலி படையின் சாதனைகள்
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி சாதித்திருக்கிறது. 

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மெல்பர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. அந்த மைதானத்தில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பெற்ற வெற்றி இதுவாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 150ஆவது வெற்றியாக இது அமைந்திருக்கிறது. இதற்கு முன்னர் 1981 ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி மெல்பர்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதன் பின்னர் தற்போதைய இந்திய அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. மெல்பர்னில் மட்டும் மூன்று டெஸ்டுகளை வென்றுள்ளது இந்திய அணி.

மெல்பர்ன் வெற்றியும், இந்திய அணியின் சாதனைகளும்:-

பும்ராவின் அசத்தல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவைச் சேர்ந்த முதல் வீரர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றார். மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் அவர் 9 விக்கெட்டுகளை சாய்த்தார். 1985-ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் கபில்தேவ் 8 விக்கெட்டுகளை விழ்த்தியிருந்தது முந்தைய சாதனையாக இருந்தது.

விக்கெட்களில் ரிஷப் பந்த் முதலிடம்

ஓரே டெஸ்ட் தொடரில் அதிகம் பேரை வெளியேற்றிய இந்திய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் ரிஷப் பந்த் முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் 20 கேட்சுகளை பிடித்துள்ளார். மெல்பர்ன் டெஸ்ட்டில் நாதன் லியோனின் கேட்சை பிடித்த போது, 1955-ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நரேன் டம்ஹேன் நிகழ்த்தியிருந்த சாதனையை முறியடித்தார்.

கோலி படையின் சாதனை

மெல்பர்னில் கிடைத்த வெற்றி வெளிநாடுகளில் விராட் கோலியின் தலைமையின் கீழ் கிடைத்த 11 ஆவது வெற்றியாகும். இதன் மூலம் வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை ஈட்டித் தந்துள்ள சவ்ரவ் கங்குலியின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். கங்குலி 28 போட்டிகளில் பெற்றுத்தந்த 11 வெற்றிகளை, கோலி 24 போட்டிகளில் ஈட்டியிருக்கிறார்.

தெற்காசியாவை தாண்டி வெளிநாடுகளில் இந்தியா இந்தாண்டு ஈட்டிய நான்காவது வெற்றியாக இது அமைந்தது. இதன் மூலம் துணைக்கண்டத்துக்கு வெளியே இந்திய அணி அதிகம் வெற்றிபெற்ற ஆண்டாக, இந்தாண்டு அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தலா ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது. தெற்காசிய நாடுகளுக்கு வெளியே இதற்கு முன் 1968-ஆண்டு இந்திய அணி மூன்று டெஸ்ட் வெற்றிகளை ஈட்டியிருந்தது. மூன்றும் நியூசிலாந்தில் கிட்டின.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com