4 ஆல் ரவுண்டர்கள்... ஒரு புதுமுக வீரர் - கலவையாக களமிறங்கும் இந்திய அணி

4 ஆல் ரவுண்டர்கள்... ஒரு புதுமுக வீரர் - கலவையாக களமிறங்கும் இந்திய அணி
4 ஆல் ரவுண்டர்கள்... ஒரு புதுமுக வீரர் - கலவையாக களமிறங்கும் இந்திய அணி

மிர்பூரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் பீல்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களம் காண்கிறது. இந்தப் போட்டியில் இளம் வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் சென் இந்திய அணிக்காக அறிமுகமாகிறார். இதுமட்டுமல்லாமல் இன்றையப் போட்டியில் 4 ஆல் ரவுண்டர்களுடன் இந்திய அணி களம்காண்கிறது. மேலும் இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படவில்லை. எனவே விக்கெட் கீப்பர் பொறுப்பையும் கே.எல். ராகுலே ஏற்றுள்ளார்.

இந்திய அணி கடைசியாக 2015 ஆம் ஆண்டு வங்கதேசம் சென்று 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. அப்போது 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது வங்கதேசம். இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டியில் இதுவரை 36 முறை மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 30 ஆட்டங்களிலும், வங்கதேசம் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், முகமது சிராஜ், குல்தீப் சென்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com