முதல் டி20 போட்டி: முதலில் பேட்டிங் செய்யும் இந்தியா - அணியில் யார் யார்?

முதல் டி20 போட்டி: முதலில் பேட்டிங் செய்யும் இந்தியா - அணியில் யார் யார்?
முதல் டி20 போட்டி: முதலில் பேட்டிங் செய்யும் இந்தியா - அணியில் யார் யார்?

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் தொடங்கும் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது. இதனையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்ய களம் காண்கிறது. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு முதலில் கேப்டனாக அறிவிக்கப்பட்டவர் கே.எல்.ராகுல். ஆனால் நேற்று அவர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி களம் காண்கிறது.

மேலும் இந்தத் தொடரில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்தியா விளையாடிய 12 டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்போட்டியை வென்றால் தொடர்ச்சியாக 13 போட்டிகளை வென்று வரலாறு படைக்க முடியும்.

இந்திய அணி: ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், சாஹல், அவேஷ் கான்.

தென் ஆப்பிரிக்கா:தென் ஆப்பிரிக்கா: குவிண்டன் டிகாக், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா, டேவிட் மில்லர், ஸ்டப்ஸ், பார்ணெல், பிரடோரியஸ், ரபாடா, கேஷவ் மஹராஜ், ஷம்சி, நோர்ஜே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com