பிங்க் பந்து பயிற்சி ஆட்டம்: இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்!

பிங்க் பந்து பயிற்சி ஆட்டம்: இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்!
பிங்க் பந்து பயிற்சி ஆட்டம்: இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்!

இந்திய - ஆஸ்திரேலிய ஏ அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்று வரும் 3 நாள் பகலிரவு பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெறும். பொதுவாகவே பகலிரவு டெஸ்ட் போட்டி என்றாலே பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படும். இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னோட்டமாக மூன்று நாள் பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம் சிட்னியில் இன்று தொடங்கியது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயாங்க் அகர்வால் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். இதில் மயாங்க் அகர்வால் 2 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து பிருத்வி ஷாவுடன், சுப்மன் கில் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர்.

டெஸ்ட் போட்டிபோல அல்லாமல் அதிரடியாக விளையாடிய பிருத்வி ஷா 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். இந்நிலையில் அவர் ஆட்டமிழந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் வேகமாக சரியத் தொடங்கியது. விஹாரி 15, ரஹானே 4, ரிஷப் பன்ட் 5 ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

மேலும் சாஹா 0, முகமது சமி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பிங்க் பந்தில் ஆஸ்திரேலிய ஏ அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். ஆஸ்திரேலிய பவுலர்கள் அபோட் மற்றும் ஜாக் வைல்டர்முத் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இப்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com