சாதிக்குமா இந்திய அணி : துபாய் மைதானம் எப்படி ?
துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய-வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்துள்ளார். கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா, ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், பும்ரா, சாஹல் உள்ளிட்டோர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
* 4 விக்கெட் எடுத்தால் புவவேஸ்வர் குமார் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டுவார்
* இந்திய அணி வெற்றி பெற்றால் இது 7வது ஆசியக் கோப்பை ஆகும். மற்றெந்த அணியும் இத்தனை முறை வென்றதில்லை
* துபாய் மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு 60 சதவீதம் இருக்கிறது
* துபாய் மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் 355/5(இங்கிலாந்து), குறைவான ஸ்கோர் 116(ஹாங்காங்)
* அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி - 137 ரன்னில் இலங்கையை வங்கதேசம் தோற்கடித்தது
* குறைவான ரன் அடித்து வெற்றி பெற்றது - 209 எடுத்து தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் சுருட்டியது
* 223 ரன்கள் - துபாய் மைதானத்தில் முதல் இன்னிங்சில் அடிக்கப்பட்ட சராசரி ஸ்கோர்