இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி: உடல்நலக்குறைவால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் விளையாட வாய்ப்பில்லை!

இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி: உடல்நலக்குறைவால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் விளையாட வாய்ப்பில்லை!
இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி: உடல்நலக்குறைவால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் விளையாட வாய்ப்பில்லை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே, இன்று மாலை மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான அரையிறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பூஜா வஸ்த்ரகர் இருவரும் உடல்நலைக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் மேற்கொண்ட பலப்பரீட்சையில் A பட்டியலில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும், B பட்டியலில் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

முதல் அரையிறுதி போட்டியானது பிப்ரவரி 23ஆம் தேதியான இன்று, தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே நாளை நடைபெறவுள்ளது.

2010 அரையிறுதி, 2020 இறுதிப்போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா!

2010ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. அப்போது முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலியா, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

2020ஆம் ஆண்டு டி20 உலக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, பைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அந்த தொடர் முழுக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த இந்திய அணி, சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் ஓபனர்கள் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்டனர்.

ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட ஆஸ்திரேலிய ஓபனர்கள் இருவரும் அரைசதம் விளாசி, 20 ஓவரில் 184 ரன்களுக்கு எடுத்து சென்றனர். 185 என்ற கடினமான இலக்கை துறத்திய இந்தியா, போட்டியின் அழுத்தத்தை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 99 ரன்களில் ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தற்போது பேட்டிங், பவுலிங், பினிசிங் பேட்டர்கள் என சம பலத்துடன் இருக்கும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்க ஒரு பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை 4 முறை நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள இந்திய அணி ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை.

இந்தமுறை அதற்கான அணி சரியாக அமைந்துள்ளதால், கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இந்தியாவிற்கு மற்றொருமுறை வாய்த்துள்ளது. இதனை ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி நிரூபிக்கும் முயற்சியில் இந்திய அணி களத்தில் இறங்குகிறது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், பூஜா வஸ்த்ரகர்!

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தும் என்று எதிர்ப்பார்க்கப்படும் இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பூஜா வஸ்த்ரகர் இருவருக்கும் உடல்நலைக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுர், பூஜா வஸ்த்ரகர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், போட்டி தொடங்குவதற்குள் அணியில் இணையும் வாய்ப்பை எதிர்நோக்கியே நிர்வாகம் காத்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் உடற்தகுதி கவலையால் பங்கேற்க முடியாத நிலை இருந்துவரும் நிலையில், தற்போது கேப்டன் கவுர், பூஜா இருவரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது, இந்திய அணிக்கு பெரிய பாதகமாகவே அமையும்.

ஸ்மிரிதி மந்தனா கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு!

ஒருவேளை ஹர்மன்ப்ரீத் கவுர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால், இந்தியாவின் தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா கேப்டனாக வழிநடுத்துவார் என்றும், வேகப்பந்துவீச்சாளர் பூஜா வஸ்த்ரகருக்கு பதிலாக அஞ்சலி சர்வானி களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ஒருவேளை பேட்டிங்கை வலுப்படுத்த நினைத்தால், யாஸ்திகா பாட்டியா களமிறங்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com