காமன்வெல்த்: இந்தியா இன்று விளையாடும் ஆட்டங்கள் என்ன?

காமன்வெல்த்: இந்தியா இன்று விளையாடும் ஆட்டங்கள் என்ன?
காமன்வெல்த்: இந்தியா இன்று விளையாடும் ஆட்டங்கள் என்ன?

காமன்வெல்த் போட்டியின் 4வது நாளான இன்றைய போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்கள் ஆயத்தமாகியுள்ளனர். அவர்கள் இன்று எந்தெந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்பது குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் 4வது நாள் அட்டவணை (ஆகஸ்ட் 01 ) பின்வருமாறு:-

* ஹாக்கி விளையாட்டின் குரூப் சுற்றில் கானாவை 11-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி நேற்று வீழ்த்தியிருந்தது. அதே உத்வேகத்துடன் அடுத்ததாக இந்திய ஹாக்கி அணி இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக களம் காண்கிறது. இரவு 08:30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.  

* ஆண்கள் ஜூடோ 66 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் ஜஸ்லீன் சிங் சைனி, வனுவாட்டு வீரர் மேக்சென்ஸ் குகோலாவை எதிர்கொள்கிறார். பிற்பகல் 02:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. மற்றொரு ஜூடோ 60 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் விஜய் குமார் யாதவ் மொரிஷியஸ் வீரருடன் மோதவுள்ளார்.

* குத்துச்சண்டை 48 - 51 கிலோ எடைப்பிரிவில் அமித் பங்கல் விளையாடுகிறார். மாலை 4.45 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

* ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோஷனா சின்னப்பா, கனடா வீராங்கனை ஹோலி நாட்டனை எதிர்கொள்கிறார். மாலை 4.45 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

* குத்துச்சண்டை 54 - 57 கிலோ எடைப்பிரிவில் ஹுசாமுதீன் விளையாடுகிறார். மாலை 6 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

* ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரவ் கோசல், ஸ்காட்லாந்து வீரரை எதிர்கொள்கிறார். மாலை 06:45 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

* பேட்மிண்டன் கலப்பு அணி பிரிவுக்கான அரையிறுதி போட்டி இரவு   10 மணிக்கு நடைபெறுகிறது.

* டேபிள் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் இந்திய அணி நைஜீரியாவை சந்திக்கிறது. காலை 11:30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

* பெண்களுக்கான பளுதூக்குதல் 71 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் விளையாடுகிறார். இரவு 11 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

* குத்துச்சண்டை 75-80 கிலோ எடைப்பிரிவில் ஆஷிஷ் குமார் விளையாடுகிறார். இரவு 01 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

* ஆண்களுக்கான 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் இறுதிப் போட்டியில் ஸ்ரீஹரி நட்ராஜ் விளையாடுகிறார். இரவு 01:07 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

இதையும் படிக்க: செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணி எந்தெந்த அணிகளுடன் இன்று மோதல்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com