\
'பிங்க் பால் டெஸ்ட்' - இந்திய சுழலை எதிர்கொண்டு தோல்வியை தவிர்க்க போராடும் இலங்கை

'பிங்க் பால் டெஸ்ட்' - இந்திய சுழலை எதிர்கொண்டு தோல்வியை தவிர்க்க போராடும் இலங்கை

'பிங்க் பால் டெஸ்ட்' - இந்திய சுழலை எதிர்கொண்டு தோல்வியை தவிர்க்க போராடும் இலங்கை
Published on

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பெங்களூரு நகரில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இலங்கை அணி 151 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணி 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது. 

திரிமன்னே, குசல் மென்டீஸ், மேத்யூஸ், தனஞ்செய டி சில்வா என நான்கு பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இந்திய அணி சார்பில் அஷ்வின் 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். 

இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 296 ரன்கள் எடுத்தாக வேண்டும். அதே நேரத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு ஆறு விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com