டி20 உலகக்கோப்பை: வெற்றிக் கணக்கை தொடங்குமா இந்தியா? இன்று நியூசிலாந்துடன் பலப்பரீட்சை

டி20 உலகக்கோப்பை: வெற்றிக் கணக்கை தொடங்குமா இந்தியா? இன்று நியூசிலாந்துடன் பலப்பரீட்சை

டி20 உலகக்கோப்பை: வெற்றிக் கணக்கை தொடங்குமா இந்தியா? இன்று நியூசிலாந்துடன் பலப்பரீட்சை
Published on
இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய முக்கிய போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியை மட்டுமே சந்தித்துள்ள நிலையில், பாகிஸ்தானுடனான அந்தப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் தோல்வி கண்டன. சுமார் ஒரு வார இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இதுவரை இரு அணிகளும் இருபது ஓவர் போட்டிகளில் 16 முறை மோதியுள்ள நிலையில், தலா 8ல் வெற்றி பெற்று சமநிலை வகிக்கின்றன. அவற்றில் கடைசியாக நடந்த 5 போட்டிகளிலும் நியூசிலாந்தை இந்தியா வென்றுள்ளது.
இதற்கு முன் நடந்த ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ள நிலையில், 2 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பதால், இருதரப்பு வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானுடனான போட்டியில் தோள்பட்டையில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா தற்போது நலமுடன் இருப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியால், அணியில் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com