டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸி அணிகள் இன்று பயிற்சி ஆட்டத்தில் மோதல்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸி அணிகள் இன்று பயிற்சி ஆட்டத்தில் மோதல்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸி அணிகள் இன்று பயிற்சி ஆட்டத்தில் மோதல்
Published on
இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
துபாயில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. விராட் கோலி தலைமையில் இந்தியாவும், ஆரோன் ஃபின்ச் தலைமையில் ஆஸ்திரேலியாவும் களம் காண்கின்றன. முன்னதாக இங்கிலாந்துடன் விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்துடன் விளையாடிய போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. ஐபிஎல் தொடரில் விளையாடியது இந்திய வீரர்களுக்கு அமீரக மைதானங்களை புரிந்து கொள்ள உதவினாலும், ஒரு சில வீரர்கள் ஃபார்மிற்கு திரும்ப வேண்டியது அவசியம்.
பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணியும், அபுதாபியில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்ரிக்க அணிகளும் களம் காண்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com