இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு நிச்சயதார்த்தம் - வெளியிடப்பட்ட புகைப்படம்

இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு நிச்சயதார்த்தம் - வெளியிடப்பட்ட புகைப்படம்

இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு நிச்சயதார்த்தம் - வெளியிடப்பட்ட புகைப்படம்
Published on

கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கர் ஐபிஎல் 2020 தொடங்குவதற்கு முன்பே தனது நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார்.

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில், விஜய் ஷங்கர் தனது நிச்சயதார்த்தத்தை முடித்திருக்கிறார். அத்துடன் தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்டு புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். 29 வயதான விஜய் ஷங்கர் தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அத்துடன் ஐபிஎல் தொடரை தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொள்ள உள்ள கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் இந்திய அணியில் விஜய் சங்கரும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு அடுத்தபடியாக இளம் ஆல்வுரண்டர்களில் முக்கிய இடத்தில் விஜய் ஷங்கர் இருக்கிறார்.

2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இவர், இதுவரை 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 45 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 2242 ரன்கள் மற்றும் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய ஏ அணியில் 88 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், கேப்டனாக இருந்து விஜய் ஹசாரே திரொபி கோப்பை வென்றிருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com