வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ரோகித் சர்மாவுக்கு மாற்றாக வரப்போகும் அந்த வீரர் இவர்தானா?

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ரோகித் சர்மாவுக்கு மாற்றாக வரப்போகும் அந்த வீரர் இவர்தானா?
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ரோகித் சர்மாவுக்கு மாற்றாக வரப்போகும் அந்த வீரர் இவர்தானா?

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்பதால் மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரனுக்கு இடம் கிடைக்கலாம்.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி நாளை (டிச.10) நடக்கிறது. இந்தப் போட்டிக்கு பின்னர் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது

இதனிடையே வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகினார். 2வது போட்டியில் 'பீல்டிங்' செய்த போது கை விரலில் காயம் ஏற்பட்டதால் பீல்டிங் செய்யாத ரோகித் சர்மா, பேட்டிங் வரிசையில் 9வது வீரராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய ரோகித் சர்மா, டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

ஒருவேளை ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் விலகினால், அவருக்கு மாற்று வீரராக இந்திய 'ஏ' அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் வங்கதேச 'ஏ' அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இவர் சதம் அடித்திருக்கிறார். சிறந்த ஓபனிங் வீரராகவும், நல்ல ஃபார்மிலும் இருப்பதால் ரோகித் சர்மாவிற்கு சரியான மாற்றுவீரராக டெஸ்ட் போட்டிகளில் இருப்பார் என்ற அடிப்படையில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு இடம் கிடைக்கலாம். அதேபோல் காயத்தால் விலகிய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் தேர்வாகலாம் எனக் கூறப்படுகிறது.

தவற விடாதீர்: `ரோகித் சர்மா ஏன் அப்படி செய்யணும்? முன்பே இறங்கியிருக்கலாமே...’- சுனில் கவாஸ்கர் கருத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com