’என்ன 3 மாதத்தில் எங்களுக்கு திருமணமா?’.. நெட்டிசன்களை அலறவிட்ட கே.எல்.ராகுலின் காதலி!

’என்ன 3 மாதத்தில் எங்களுக்கு திருமணமா?’.. நெட்டிசன்களை அலறவிட்ட கே.எல்.ராகுலின் காதலி!

’என்ன 3 மாதத்தில் எங்களுக்கு திருமணமா?’.. நெட்டிசன்களை அலறவிட்ட கே.எல்.ராகுலின் காதலி!
Published on

ராகுல் - அதியாவின் திருமணம் இன்னும் சில மாதங்களில் நிகழ உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டு உள்ளார் அதியா.

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும், நடிகை அதியா ஷெட்டியும் நெடுநாள்களாக காதலித்து வருகின்றனர். இருப்பினும் பொதுவெளியில் ஒன்றாக சுற்றித் திரிவதை தவிர்த்தே வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பரில் தான் தங்கள் காதல் அதிகாரப்பூர்வமாக இந்த ஜோடி அறிவித்தது. அதியாவின் பிறந்த நாளன்று இருவரும் ஒன்றாக சமூக வலைதளத்தில் தோன்றி தங்கள் காதலை அறிவித்தனர். அதன் பின்னும் தங்கள் காதல் குறித்து ஊடகங்களிடம் கூட இருவரும் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. இந்நிலையில் ராகுல் - அதியாவின் திருமணம் இன்னும் சில மாதங்களில் நிகழ உள்ளதாக தகவல் பரவியது.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டு உள்ளார் அதியா. அதில் “I hope I’m invited to the wedding that’s taking place in 3 months, Lol.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது “இன்னும் 3 மாதங்களில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு நான் அழைக்கப்படுவேன் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டு உள்ளார். உண்மையிலேயே 3 மாதங்களில் ராகுல் - அதியா திருமணம் நடைபெற போகிறதா அல்லது இந்த பதிவு விளையாட்டாக பதிவிட்டுள்ளாரா என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இதன் காரணமாக ட்விட்டரிலும் #KLRahul என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com