சுதந்திர தினம்: பாக். கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி வாழ்த்து

சுதந்திர தினம்: பாக். கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி வாழ்த்து
சுதந்திர தினம்: பாக். கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி வாழ்த்து

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரு நாள் முன்பும் பின்பும் தங்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. அதன்படி பாகிஸ்தானுக்கு நேற்று சுதந்திர தினம். இந்தியாவுக்கு இன்று. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷாகித் அப்ரிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், அண்டை நாடுகளை மாற்ற முடியாது. எனவே அனைவரும் அமைதி, சகிப்புத் தன்மை, அன்பை நோக்கி பாடுபடுவோம். மனித குலம் மேம்படட்டும். நம்பிக்கை வீண்போகவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com