24வது சதத்தில் விராட் கோலிக்கு இத்தனை ரெக்கார்டா..?

24வது சதத்தில் விராட் கோலிக்கு இத்தனை ரெக்கார்டா..?

24வது சதத்தில் விராட் கோலிக்கு இத்தனை ரெக்கார்டா..?
Published on

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், குறைந்த போட்டிகளில் 24 சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். 

கோலி‌ தனது 123ஆவது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டான் பிராட்மேன் 66ஆவது இன்னிங்ஸில் 24ஆவது சதத்தை பூர்த்தி செய்திருந்தார். சச்சின் டெண்டுல்கர் 125ஆவது இன்னிங்ஸிலும், சுனில் கவாஸ்கர் 128ஆவது இன்னிங்ஸிலும் தங்களின் 24ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்திருந்தனர். 

விராட் கோலி இந்திய மண்ணில் கடைசியாக விளையாடிய 5 இன்னிங்ஸ்களில், 2 இரட்டை சதங்கள், 2 சதங்கள், ஒரு அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நடப்பு ஆண்டில் மட்டும் ஆயிரம் ரன்களுக்கு மேல் கோலி குவித்துள்ளார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளியுள்ளார். சேவாக் 104 போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக் 23 சதம் அடித்துள்ளார். 51 சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ராகுல் டிராவிட்(36), சுனில் கவாஸ்கர்(34) சதங்கள் எடுத்துள்ளனர். 

சர்வதேச போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி அடித்த 30வது சதம் இது ஆகும். இந்தியாவில் விராட் கோலி அடித்த 11வது டெஸ்ட் சதம் ஆகும். இந்த ஆண்டில் மட்டும் விராட் கோலி 4 சதங்களை அடித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் 2 சதங்களுடன் 593 ரன்கள் குவித்தார். 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 230 பந்தில் 139 ரன் குவித்தார். 184 பந்தில் சதம் அடித்த விராட் கோலியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com