தடுமாறும் இந்தியா... போராடும் கடைநிலை வீரர்கள்

தடுமாறும் இந்தியா... போராடும் கடைநிலை வீரர்கள்

தடுமாறும் இந்தியா... போராடும் கடைநிலை வீரர்கள்
Published on

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. முதல் நாள், முதல் பந்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது இலங்கை.லக்மல் வீசிய முதல் பந்திலே லோகேஷ் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து புஜாரா களமிறங்கினார். இந்நிலையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லக்மல் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். பின்னர் அணியின் கேப்டன் விராத் கோலி களமிறங்கினார். அவரும் ரன் எதுவும் எடுக்காமல் லக்மல் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யு ஆகி வெளியேறினார். போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் போட்டி விரைவிலே முடிக்கப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 17 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்திருந்தது. புஜாரா, ரஹானே இவரும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் ரஹானே அவுட் ஆக, பிறகு அஸ்வின் வந்தார். சிறிது நேரம் புஜாராவுக்கு ஒத்துழைப்பு கொடுத்த இவர், 4 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய சஹா, புஜாராவுக்கு ஒத்துழைப்பு தந்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் புஜாரா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று மூண்றாவது நாள் ஆட்டம் காலை தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, அரைசதம் அடித்து சற்று ஆறுதல் அளித்தார். ஆனால் அந்த ஆறுதல் நீடிக்கவில்லை. புஜாரா 117 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தற்போது ஜடேஜாவும், சஹாவும் போராடி வருகின்றனர். இந்திய அணி தற்போது 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com